மன்னாதி மன்னவனே

விண்ணைநோக்கி நீச்சலடித்து
எங்கள் மனதை
கொள்ளை கொண்ட
மன்னாதி மன்னவனே.....!

நீ குப்பறத்து
மண்ணை காண துடிக்கின்றாய்
நாங்களோ உன்னை
காண துடிக்கின்றோம்.....!

உன் கை கால்களின்
அசைவுகளெல்லாம் எங்களுக்கு
ஒரே மாதிரியாகதான்
புலப்படுகிறது ஆனால்
ஒவ்வொரு அசைவிற்கும்
வெவ்வேறு அர்த்தமுண்டோ.....!

உன் பற்களற்ற
சிரிப்பை கண்டு
நாங்கள் சொற்களற்று
திகைக்கின்றோம்.....!

உன் நாடி துடிப்பின்
சத்தத்தை உணர
எங்கள் மடிகள் இரண்டும்
வாடிக்கிடக்கின்றன.....!

என் நெஞ்சில் முளைத்த
கேசங்களேல்லாம் ஏங்குகின்றன
நீ எப்போது சிறுநீர் கழித்து
செம்மையாக்குவாய் என.....!

எங்கள் வீட்டின் தரைகளெல்லாம்
காத்து கிடக்கின்றன
நீ எப்போது மலம் கழித்து
கறைகளாக்குவாய் என.....!

ஓர் எழுத்தில்
கவிதை எழுதமுடியாது
என்று சொன்ன நான்
உன்னிடத்தில் தோற்றுபோனேன்
நீ உச்சரிக்கும் அ... உ... க...
என்ற எழுத்தில் ஓராயிரம்
கவிதைகள் புதைந்திருப்பதை
இப்பொழுதுதான் உணர்ந்தேன்.....!

பல வார்த்தைகளை தொடுத்து
கவிதை புனைந்த நான்
உன்னிடத்தில் இருந்து
இரு வார்த்தைக்காக
ஏங்குகிறேன்.....!
தாத்தா பாட்டி என்று எங்களை
எப்போது அழைப்பாய் என......!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (23-Aug-15, 9:14 am)
Tanglish : Mannathi mannavane
பார்வை : 159

மேலே