நாணம்
மேடுபள்ளம் மறைக்கும்
நதிகளுக்கு உண்டு நாணம்!!
பாலாடை கொண்டு போர்த்தும்
பாலுக்கு உண்டு நாணம்!!
இரவை போர்வையாய் மறைக்கும்
சூரியனுக்கும் உண்டு நாணம்!!
ஆனால்
இக்காலத்தில் வாழும் சில
பெண்களுக்கு உண்டா நாணம்?
அக்கால பருவமகள் தன்
அத்தானை பார்த்தாலே
தலை குனிந்திடுவாள்!
ஆனால்,
இக்கால சில பருவபெண் எந்த
ஆணை பார்த்தாலும்
மேனி காட்டுகிறாள்!!
இதைச் சொன்னதாலே
எனக்கும் நாணமில்லை!!
இப்படிச் செய்பவருக்கும்
நாணமில்லை!
வெட்கம் என்ற ஒழுக்கத்தை
மறந்துவிட்டது பெண் இனங்கள்! அவர்கள் மேனி என்ற
காட்டுக்குள் புதைந்துவிடுகிறார்
சில ஆண் இனங்கள்!
பருவம் கொண்ட மகள் ஒருத்தி
தன் பனிவிழி பார்வை கொண்டு
அத்தானை பார்ப்பதில் அங்கே
வெட்கத்தில் அழகு உண்டு
என்பது உண்மை!
இக்காலத்தில்
பருவம் வரும் முன்னமே
வெட்கத்தை புதைத்துவிட்டு
ஆண்பெண் கண்டபடி
வருகின்றார் காட்டுவழி வீதியிலே!
என்பதே இங்கே உண்மை!
பெண்களுக்கு நாணம் வரும்
இனிவொரு காலம் இங்குண்டா??
ஆண்களும் எண்ணங்களை சரி
செய்யும் அக்காலமும் இங்குண்டா?
மனிதஇனங்களே!!
நாணம் கொள்ளுங்கள்!
விலங்குக்கும்,மனிதருக்கும்
வேறுபாட்டில் முக்கியமானது
நாணம் ஒன்று!!
அதை இழந்துவிட்டு மனிதனின்
அடையாளம் இழக்காதீர்!
அதை பெற்று வந்தே மனிதனின்
அடையாளம் உயர்த்துவீர்!!