ஆடை

ஆடை அணி உடை என்ற
ஒரு பொருட் பன்மொழிகளால்
அது பெருமையுருவதில்ல்லை –

உருவம் மாறும்போதெல்லாம்
விருப்பமுடன் உருமாறி
பருவத்திற்கும் பருவகாலத்திற்குமாய்
தன்னை மாற்றிக் கொண்டது-

வெட்டி தைத்தாலும்
சுற்றி அணிந்தாலும் அழகானது
நம்முடன் போட்டிபோடும் அவைகளுடன்
போட்டோ எடுத்துக்கொள்வது மரபு

அடையாளம் தெரியாதவனை
நிறத்தால் அடையாளப் படுத்துவதும்
குறைத்து அணிந்தால்
வெட்கப்படுவதும் அதன் இயல்பு

வெள்ளியும் தங்கமும் இழையோட
பட்டாய் பளபளக்கும்
அவைகள் இல்லாமல் இல்லை நமது மரியாதை

கிழிந்தாலும் நைந்தாலும் நூலானாலும்
அவைகள்
துணிவிழந்து துவண்டுவிடுவது இயற்கைதானே
சி. அருள் ஜோசப் ராஜ்

எழுதியவர் : (23-Aug-15, 7:01 am)
Tanglish : adai
பார்வை : 63

மேலே