தெரியவில்லை வேறொருத்தியை நினைக்க 555

அன்பே...

நீ என்னைவிட்டு விலகி
சென்றபோதும்...

நம் காதலின் நினைவுகளை தினம்
திரும்பி பார்த்துகொண்டு இருக்கிறேன்...

வலிகளை நீ
எனக்கு தந்துசென்றபோதும்...

இன்னும் நேசித்து கொண்டு
இருக்கிறேன் உன்னை...

நீ என்மீது கொண்ட காதல்...

மழைமேகங்களுக்கு நடுவில் எப்போதாவது
தோன்றும் வானவில்லை போல்...

உன்மீது நான் கொண்ட காதல் என்றும்
நிரந்தரமான வானம் போன்றது...

உன் நினைவுகளோடு நான் சுற்றுவதால்
உனக்கு ஏளனமாக தெரிகிறது...

வேறொரு பாவையை
நினைக்க தெரியாமல் அல்ல...

உன்னை மறக்க
எனக்கு தெரியவில்லை...

அதனால்தனாடி வேறொருத்தியை
நினைக்க தெரியவில்லை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Feb-16, 4:15 pm)
பார்வை : 471

மேலே