தவமின்றி கிடைத்த உறவே
தவமின்றி கிடைத்த உறவே..!
இருந்தாலும் பிரிந்தாலும் -அன்பால்
கண்ணீரையே பரிசளித்து
சாபமிடும் வரமாகும்
உண்மை உறவே -உன்னை
வரமென்று ஏற்கவா..?
சாபமென்று எதிர்க்கவா..?
அறியாது தவிக்கின்றேன்
உன்னைப்போல் நானும்..
-மூர்த்தி