ஒற்றை வார்த்தையால்
உன் பாத சுவடுகளை ...
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!
நீ
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்