இருண்ட வாழ்வில் ஒரு புது உதயம் 555

என்னவளே...

ஒளி இல்லாத என் வாழ்வில்
நிலவொளியாக வருவாய் என்றுதான்...

உன்னை நிலவென்றேன்...

சூரியனை போல் சுடுவாய்
என்று தெரியவில்லை அப்போது...

நந்தவனத்தில் வீசும் தென்றலை போல்
இதமாக வீசுவாய் என்றுதான்...

தென்றல் என்றேன்
புயலாக வீசினாய் பார்வையாலே...

நீ கோவப்பட்டு பேசும்
வார்த்தைகளை கவிதை என்றேன்...

என் இதயத்தை தைக்கும்
முட்கள் என்று தெரியாமல்...

பெண்மனம் மென்மையானது
என்று நேசித்தேன்...

அதில் உன் மனம் மட்டும்
கல் என்று தெரியவில்லையடி...

கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் கேட்கும் வரம்...

வரம் கிடைக்கவில்லை
என்று வருந்தியதில்லை...

கண்ணுக்கு தெரியும் உன்னிடம்
மட்டும் கேட்டேனடி...

உன் மனதில் ஒரு இடம்...

விருப்பம் இல்லையெனில்
சொல்லி இருக்கலாம் அன்றே...

இத்தனை நாட்கள்
என்னை காக்கவைத்தது ஏனடி...

நிமிடங்களை கூட தொலைக்க
விரும்பாதவன்...

உனக்காக நாட்களை
தொலைத்திருக்கிறேன்...

நான் தொலைத்த இதயமும் நாட்களும் என்றும்
எனக்கு மீண்டும் கிடைப்பதில்லை...

இருண்ட என் வாழ்வில்
ஒரு புது உதயம் இனி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Feb-16, 8:48 pm)
பார்வை : 410

மேலே