வறுமையில் கொடுமை

மார்கழி மாதம்
இளகாத மழை
மயங்கிய மேகம்
மங்கிய காட்சி
உஷ்ணம் தேடும் தேகம்
உறைந்து போன இரவு
கண்கள் விழித்து
தூக்கம் தொலைத்து
குழப்பக்கதியில் ஒரு தாய்...

அவளின் வறுமை(யை) மழை அறியாது
அதனைச் சொல்ல சொல் கிடையாது
போர்வை தேடி சேய்கள் வாட
போர்வை ஒன்றைத் தாய்மை தேட
போர்வை இன்றி கண்கள் கலங்க
சேய்கள் தூங்க
சேலை அவிழ்த்தாள்
போர்வை அமைத்தாள்

குளிரின் காமம் அவளைத் தீண்ட
வானம் அழ - அவளும் அழ
விரக்தியில் சொன்னாள்
"வா... தொடு... என்னுள் ஊடுருவு
குளிரே உன் தேடல் தீருமட்டும்..."
***

எழுதியவர் : மொஹம்மத் பர்சான் (26-Feb-16, 1:46 am)
Tanglish : VARUMAIYIL kodumai
பார்வை : 131

மேலே