விடலையின் விரதம்

ஒவ்வொரு நாளும் உலகில்
பல பல மாற்றங்கள்
ஆனால்...
நான் மட்டும் நானாகவே

மண்ணைக்கிண்டி
மல்லுக்கட்டும் வறுமையின்
விந்தில் பிறந்ததும்
பார்த்ததும் பிடிக்கும்
பள பள மேனி
எனக்கில்லை என்பதும்
மணமகன் வரவை
மறுத்ததின் நிதர்சனங்கள்

மாராப்பு ஒதுக்கி
மெல்லிடை நெளிய
நாடகம் போடும்
கன்னியாய் இருப்பின்
காதலர் அதிகம்

கண்ணென கற்பை
உயிரென உள்ளதைக்
காக்கும் எம்மிடம்
வாலிபம் தேடும்
நாடகம் ஏது

கடலுண்டு... முத்துண்டு...
முத்துக்குளிக்க ஆடவன் தேடி
நானெங்கே போக...

விடலையின் வாழ்வில்
விடியலைத் தேடும்
விடுதலை வீரன்
விழித்திடும் வரைக்கும்

மூடிய முத்து உறங்கட்டும்
வாலிப உலை உறையட்டும்
விடலையின் விரதம் நீளட்டும்
முடமாகும் பெண் வாழ்வை
திடமாக்கும் - உரியவன்
வரும் வரைக்கும்...
***

எழுதியவர் : மொஹம்மத் பர்சான் (26-Feb-16, 12:49 am)
பார்வை : 92

மேலே