அக்னிக்கருப்பை 1எழுதிடாத எழுத்துக்கள்
அக்னிக்கருப்பை-1
எலும்புக்கு எழுதியதும்
தழும்புக்கு எழுதியதும்
தகனத்துக்கு கருகியது.....
கலவுக்கு எழுதியதும்
உலவுக்கு எழுதியதும்
இலவுக்கு பெருகியது....
உயிருக்கு எழுதியதும்
பயிருக்கு எழுதியதும்
மண்ணுக்குள் செருகியது....
கயிருக்கு எழுதியதும்
உயிருக்கு எழுதியதும்
மயிருக்கு மறுகியது....
உணவுக்கு எழுதியதும்
கனவுக்கு எழுதியதும்
பிணத்துக்குள் உருகியது....
உணர்வுக்கு எழுதியதும்
புணர்வுக்கு ஏழுதியதும்
இரவுக்குள் மறுவியது.....
உண்மைக்கு எழுதியதும்
உரிமைக்கு எழுதியதும்
ஊமைக்கு உருகியது....
பெண்மைக்கு எழுதியதும்
வன்மைக்கு எழுதியதும்
எருமைக்கு உரைத்தது.....
காதுக்கு எழுதியது
செவிடனுக்கு போனது...
கண்ணுக்கு எழுதியது
குருடனுக்கு போனது.....