காமராஜர்-முஹம்மத் ஸர்பான்

தமிழச்சி கருவில்
தமிழ் போற்றும் தருவாய்
தமிழனே உருவானாய்.
***
வேயாத குடிசையில்
வழுக்கி விளையாடும் நிலாக்கள்
கற்காத அறிஞனோ?
***
தென்னாட்டு மண்ணிலே
படிக்காத மேதை இவன்
ஏழையின் தோழனோ?
***
பள்ளிப்பாதையில்
அனலாகும் போராட்ட பயணத்தில்
சிறைஎனும் பட்டம் பெற்றாயோ?
***
அலிப்பூர்,வேலூர்
இன்னும் எத்தனையோ?
உன்னிடம் தோற்ற கல்லறைகள்
***
காதல் வரும் வயதில்
புரட்சிக்காய் புறப்பட்டாய்
எழுச்சிக்காய் உரமானாய்.
***
மணிமுத்தாறு,அமராவதி
வைகை சென்று பார்த்தேன்.
உன் உதிரம் கண்டேன்
***
தாய்நாட்டு பிரசவத்தில்
அந்நியன் தொப்புள் வெட்டி
சுதந்திரம் பெற்றோம்
***
சாதியெனும் விஷபூச்சை
கல்வியிலிருந்து நீக்கிய
அரும் மருந்தும் நீயே!
***
பசியின் விளிம்பில்
சின்ன இரைப்பைக்குள்
ஏப்பம் கேட்டதும் உன்னாலே!
***
பாரத மண்ணுக்கடியில்
தேசக்கொடி ஒன்று உறக்கம்
கொள்கிறது உன் வடிவில்..,
***
கருப்பு பிண்டமொன்று
காவிரியோ! கங்கையோ? கரைந்ததோ?
வைரங்கள் விளைந்ததோ?
***
வங்கியிலோ! கையிலோ! சொத்து இல்லை
தலைவனுக்கு உன்பெயர் இலட்சணம்
உன்னடி தொட்டு நானும் வணங்குகிறேன்
***
மீண்டும் பிறப்பாயா?
கண்களால் தேடுகிறேன்.
கண்ணீரால் வாடுகிறேன்
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Feb-16, 5:43 pm)
பார்வை : 4221

மேலே