எவ்வடிவானாலும் தாய்மையே

எவ்வடிவானாலும் தாய்மையே..!
அன்னையும் ஆகினாள் அக்காள்
அனைத்தையும் சுமந்தே
தன்னையே சளைக்காமல்
திண்ணையாக்கினாள் .!
தன்னின் கடமையை முதுகில்
தன் தங்கையை இடுப்பில்
தன் தங்கையின் கடமையை கையில்
தன் சுமையென கருதாமல் சுமக்கிறாள்!
செருப்பில்லா கால்களாலும்
செருக்கில்லா மனதினாலும
உறுப்புகள் வலி கண்டாலும்
பொறுப்புடன் சுமக்கிறாள் வலிமையோடு!
பெண்மை எவ்வடிவானாலும்
தாய்மை என்பது உண்மை
மென்மை உடலானாலும்
தின்மை நிறைந்த அன்னையே
வயதில் சிறியவள் என்றாலும்
என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உன்னையே.!
படமும், பாடமும்
விஜயகுமார் வேல்முருகன்