ஆடித்தான் போய் விடுவான்

முரட்டுக் காளை முட்டி மோதும்
கண்கொள்ளாக் காட்சி அது
நெஞ்சம் தாங்காக் காட்சியுமாம்
வீரருக்கு விளையாட்டு
அது விபரீத விளையாட்டு
காளைகளுக்கு முரண்டு பிடிக்கும்
மூச்சிரைத்து மோதி வீழ்த்தி
வென்றெடுக்கும் காட்சி,
இது பார்க்கின்ற மக்களுக்கோ
காமடிக் காட்சியாக உள்ளது
பாறையுடன் மோதினால் முட்டி உடையும்
காளையுடன் மோதினால் என்னதான் நிலையோ
ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு அல்ல
விபரீத வீர விளையாட்டு
எதுவும் நடக்கலாம், வெற்றியும் கிட்டலாம்
இருந்தும் இது ஒரு விளையாட்டு
காளைக்கும் காளையருக்கும் இடையில்
நடக்கும் மல்யுத்தப் போட்டி
நினைத்தாலே சாதரணமனிதன்
ஆடித்தான் போய் விடுவான்
களத்தினில் இறங்கும் இளஞ்சன்
என்ன பாடோ,
சும்மா பாய்ந்து பாய்ந்து காளைமாடு
தாக்குவதை தயங்காமல்
எதிர் கொள்வான் இளஞ்சன்
,அன்று தொட்டு இன்று வரை ,
ஜாம்பவான்கள் விளையாட்டில்
இதற்கும் முன்னுரிமை அளிக்கப் படுகிறது
எது ஒழிக்கப் பட வேண்டுமோ
எது காக்கப் பட வேண்டுமோ
மனிதன் மனிதனாகவே வாழ வேண்டும்