மகள்

1. மத்தாப்பு பாவடையில் மடியில் அமர
கித்தாப்புக் கொள்ளும் தந்தை மனம்

2. வெள்ளை மனம் கொள்ளைக் கொள்ளும் தினமும்
மழலை முதல் பருவ பேச்சுகள்

3. காதலை மிக எளிதில் வெல்லும் கண் மூன்
நீ ஆ(ட்)டும் ஆட்டம்

4. நீ என் அடியொத்த ஆசை
யாரடியும் ஒத்தா என் அடியை

5. என் கோபங்கள் மீது எனக்கு கோபம்
உன்னைக் கோபங்கள் கொண்டப்பின்

6. எங்கள் கனவின் வடிக்காலாய் உந்தன் வாழ்வு
ஆக்கக்கூடாது இதென் கனவு

7. செல்லாக்காசாய் ஆனது என் மன அழுத்தம்
செல்லமாய் என் கன்னத்தை நீ வருட

8. என் அறிவுக்கும் அன்புக்கும் எப்போதும் போட்டி….
உன்னை வழி நடத்தும் தருணத்தில்

9. ஈரம் இன்னும் காயவில்லை
நீ கைப்பிடித்த விரலில்...

10. எந்தன் மனப் பூலோகச் சுழற்சி
மாற்றம் கொண்டது உனது இனிய வரவால்

11. நன்றாகப் புரிந்தது உன்னால் இன்று
என் தந்தையின் தாக்கம்

- செல்வா

எழுதியவர் : செல்வா (11-Jan-16, 8:24 am)
Tanglish : magal
பார்வை : 2575

மேலே