உன்னோடு ஒன்றினேன்
உன்னோடு ஒன்றினேன்.!
~~~~~~~~~~~~~~~~~~~
ஒப்பில்லாத் தமிழன்னையே
தாலாட்டின் இன்னிசையில்
மூழ்கியே தினம்
உன்னோடு ஒன்றினேன்.!
அகரத்தின் முதலெழுத்தை
கைப்பற்றி எழுதிய
ஆசானின் அருந்தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!
பண்பாக பலக் கவிதை
படைத்திடும் கவிஞர்கள்
கைவண்ண கவித்தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!
எண்ணிய வேகத்தில்
ஊற்றாக சுரந்திடும்
முத்தமிழ் சுவையே
உன்னோடு ஒன்றினேன்.!
உயிரின் மூச்சாகவும்
பேச்சின் வீச்சாகவும்
உணர்வில் கலந்த தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!
மூச்சரும்* வேளையிலும்
முத்தான என் தமிழே
அமுதே உனைக் காத்தே
உன்னோடு ஒன்றிடுவேன்.!
(மூச்சரும்*_ உயிர் பிரியும்)
விஜயகுமார் வேல்முருகன்