ஆனந்தமான பயணம்

டக்குச்சிக்கு டக்குச்சிக்கு ஓடிக்கிட்டு பாடிக்கிட்டு
கொட்டாங்குச்சி சக்கரமாய் ஊருக்குள்ள சுத்திடுவோம்
டப்புடப்பு டப்புடப்பு சத்தங்களை போட்டுக்கிட்டு
மாட்டுவண்டி ஏறிக்கிட்டு வீல்வீலுனு கத்திடுவோம்

கூட்டமாக சேர்ந்துக்குவோம் கும்மாளங்கள் போட்டுக்குவோம்
ரோட்டோரமா போறவர பயங்காட்டி பதறவைப்போம்
சையச்சையா பாட்டுப்போட்டு வண்டிமேல‌ ஆடிடுவோம்
கையக்கால ஆட்டிக்கிட்டு ஜாக்சனாக மாறிடுவோம்

ஊருபூரா சுத்திவரும் மாமாவோட வண்டியிது
மச்சாங்களும் மச்சினியும் சேர்ந்துஓட்டும் வண்டியிது
கரும்புக்காடும் கடலக்காடும் கடக்கும்போது மெல்லநிக்கும்
கரும்புச்சக்க கடலத்தோலா கடந்தவழி சிரித்திருக்கும்

குறும்புப்பசங்க நாங்கதாங்க ராசபரம்பரை ஆளுதாங்க‌
வாளுஏதும் கையிலில்லை வாலுத்தனம் நிறையவுண்டு
பள்ளிக்கூடம் லீவுவிட்டா வீட்டிலிருக்க மாட்டோமுங்க‌
குருவியாகி பறந்துபார்ப்போம் தவளையாகி கிணத்தில்கிடப்போம்

டக்குச்சிக்கு டக்குச்சிக்கு போலாம்கொஞ்சம் வாரீகளா
டாட்டாபிர்லா வண்டியில்ல மாட்டுவண்டி வருவீகளா
டப்புடப்பு டப்புடப்பு சத்தம்போட வாரீகளா
ஆட்டம்முடிஞ்சு படுதாகாலி டண்டண்டண்டண் வாரேனுங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-16, 11:21 am)
பார்வை : 3139

மேலே