வீணாக்கும் உணவில் அடுத்தவர் பசி

உணவே மருந்து முன்னோர்களின் காலம்...
மருந்தே உணவு இன்றைய காலம்...
அளவோடு சாப்பிட்டுத் தாயோடு வாழ்ந்தார்கள்...
அழகோடு சாப்பிட்டு நோயோடு வாழ்கின்றோம்......


ஐம்பதும் நூறும் பையில் உள்ளதேயென்று
சில்லறைகளைச் சிந்தவிட்டுச் செல்வாயோ?... மனிதனே...
உணவைச் சிந்துவது ஏனென்று கேட்டால்
எறும்புகளுக்கென்று சொல்வது சரிதானா?... நண்பனே......


சேற்றில் கால் வைத்தவனைக் கேட்டுப்பார்
சோறாக்க எவ்வளவு உழைத்தானென்று தெரியும்...
எளிதில் உனக்கு கிடைத்து விட்டதால்
எள்ளளவும் அதனருமை இன்னும் புரியவில்லை......


உண்ணும் போதுநீ சிந்தியதை எடுத்தாலே
உணவற்ற ஏழை ஒருநேரம் பசியாறுவான்...
அறிந்தும் அறியாதும் உணவை வீணாக்குவதால்
வறியவன் வாழ்ந்து கொண்டே சாகிறான்.......


உன்னால் பலவுயிர் பசியால் வாடுது...
உலையில் கொதிக்கும் நீரின் அரிசிகளாய்
உள்ளுக்குள் அவன்வயிறும் பசியால் கொதிக்குது...
உணவை வீணாக்காதே உயிர்களைக் கொல்லாதே......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Nov-16, 10:35 pm)
பார்வை : 2018

மேலே