கார்த்திகை 27.......... அகலா விழிகளில்
ஓடியாடி திரியும் வயதில்
உம் இன்பங்களைத் துறந்து
நாட்டின் விடியலுக்காய்
இணைந்தீர்களே...
விடுதலை போராட்டத்தில்....!
ஈழ மண்ணில் தான்
நின்று விட வேண்டும்
உயிர் மூச்சென உத்தமராய் காவியமானீர்களே...
என்றும் உங்கள் நினைவுகள் அகலவில்லை
எங்கள் மனதை விட்டு...!
கண்ணீர் தான் வழிகிறது எம் கண்களால்....
உங்கள் தியாகத்திற்கு கிடைக்கவில்லை இன்னும்
எம் தேசத்திற்கு விடியல்....!
மறக்க முடியுமா
உங்கள் புன்னகைகளை...
காலங்கள் கடந்தாலும் என்றும்
வாழ்கிறோம் நாங்கள்
உங்கள் நினைவுகளில்...!
எம் இரத்தமும் கொதிக்கிறது
உங்கள் கல்லறைகளை பார்க்க...
காத்திருங்கள் விரைவில்
நிறைவேறும் உங்கள் கனவு
அதுவரை ஓயப்போவதில்லை
நாங்கள்..!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.
(வன்னிப் போராட்டத்தில் இணைந்து வீரச்சாவை தழுவிய யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த உடன் பிறவா சகோதரன் ரவிக்குட்டி மற்றும் எனது தோழி ஆராதனாவுக்கும் மற்றும் அனைத்து மாவீரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்....!)