வெண்பாக்கள்

கள்ளமில்லா நெஞ்சமே கற்புக்குச் சான்றாகும்
வெள்ளையுள்ளம் கொண்டவர்க்கு வெந்தழலும் - துள்ளியே
கொள்ளையழ காகும் கொடுப்பினையு முண்டாமே
உள்ளத்திற் கஃதே உயர்வு .

வேண்டாமே சிற்றின்பம் வெந்திடுமே நெஞ்சமுமே
மாண்டவர்கள் பல்லோர்கள் மாதரிச்சைக் காரணத்தால்
மூன்டிடுமே சண்டைகளும் முத்தாய்ப்பாய்ச் சொல்லுகின்றேன்
மீண்டிடுங்கள் பெண்ணாசை மீண்டு .

கொடையாகப் பைந்தமிழ்க் கொள்ளையின்பம் தந்தே
தடையாக என்னுடலும் தக்கபடி மாறாக்
கடையாக வந்தாலும் கண்விழித்துக் காப்பாள்
விடையாகத் தாய்த்தமிழ் விந்து .

வேண்டுமென்றே ஆசைகொண்டால் வெந்தழலில் வாழ்க்கையுமே
ஆண்டவனால் கூட அழிக்க முடியாதே .
வேண்டாமே சிற்றின்பம் வேகமுறப் பற்றிடுமே
தீண்டாதீர் மாந்தரைத் தீ .


ஒற்றைக்கால் தூக்கியே ஓங்கார நாட்டியத்தை
எற்றைக்கும் ஆடுகின்ற ஈசனவன் - மற்றைக்கால்
தூக்காத காரணமேன் துன்பத்தில் வாடினால்
காக்கவே நின்றான் கனத்து .

ஆய்ந்துமே ஈசனோ ஆடுகின்றா வொற்றைகால்ப்
பாய்ந்தாடிப் பாரோரைப் பார்க்கின்றான் நாள்தோறும்
வாய்ப்பு வரும்போது வந்துநமைக் காத்திடுவான்
ஏய்ப்பே இனியில்லை என்று.

தேர்ந்திங்கு நாவால் தெரிந்தவர்க்குச் சொல்லிடுவேன்
ஈர்ப்புடனே ஈசனவ னின்பமிகு நாட்டியம்
பார்ப்பவர்கள் கண்மயங்கிப் பாதமதைக் கும்பிடுவார்
சீராகி நிற்கும் சிறந்து .
.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Nov-16, 9:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே