சல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்குத் தடை:
விலங்கு ஆர்வலர்களின்
கருணையால்!
இப்போது
வங்கி, ஏடிஎம்
வாசல்களிலில்
செல்லாக் காசால்
சல்லிக் காசும்
இல்லாத காளைகள்
கன்னியோர்
முதியோர்களுக்காக
சல்லிக்கட்டு!
ஒரு நாள் நிகழ்வு அல்ல
ஐம்பது நாட்கள்
நடக்குமாம்!
கட்டணமில்லா
உடல்வலிமை
பரிசோதனை
விளையாட்டு.
ரத்தம் சிந்த வேண்டாம்
குடிநீர் பாட்டில்கள்
மறவாமல் எடுத்துச் செல்க
வெயில் கொடுமையை விரட்டி அடிக்கக!
குடையும் தேவை.
இது வரை எமலோகம் சென்றோர்
ஏழுபது பேருக்கும் அதிகமாம்
வங்கி ஊழியர் பதினோரு பேரும்
மேலே அழைக்கப்பட்டு விட்டார்களாம்
எச்சரிக்கை தேவை கவனமும் தேவை