மஞ்ச தாலிகட்டி

மஞ்ச தாலிகட்டி

நீ
மஞ்சபூசும்
அழகுல
எனக்கும்
லேசா
கூசுதடி

உன்
மச்சம்
பார்த்த
அழகுல
மிச்சம் பார்க்க
தோணுதடி

நீ
தவனிக்கட்டும்
அழகுல
மனசு
செக்குமாடா
சுத்துதடி

நீ
புல்லுக்கட்ட
தூக்கையில
மனசு
மல்லுக்கட்ட
தோணுதடி

நீ
மச்சானு
சொல்ல
வெயிலும்
குளிரா
மாறுதடி

உன்ன
மஞ்ச தாலிகட்டி
சொந்தமாக்க
நெஞ்சு துடிக்குதடி

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (14-Nov-16, 4:49 pm)
பார்வை : 156

மேலே