கல் நெஞ்சக்காரன்

“இரசிக்கத் தெரியாதவன்!
இரசனை இல்லாதவன்!
கல் நெஞ்சக்காரன்!”
என்று கடிந்திருக்கும் அந்த மலர்.
நான் எப்படி விளங்கவைப்பேன்
அதன் அருகாமையால்
அசைவற்றுப் போனவன் என்பதை.
-இப்படிக்கு மரம்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (14-Nov-16, 10:03 am)
பார்வை : 195

மேலே