குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

பத்து மாதம் அன்னையின்
பனிக்குடம் உடைத்து வந்த
பனி மலரே....

தென்றலினும் மெல்லிய
தேகம் பட்டு உடைகிறது
என் நெஞ்சு ..

உன் புன்னகை தான் பட்டு
பூக்காத பூக்களெல்லாம்
பூக்குதே ....

உன் கன்னம் தொட்ட
மை தனில் பல காவியங்களின் வரவு...

உன் இரு கன்னக் குழிகளில்
ரோஜாத்தோட்டம் போட்டது யார்....

உன் கண்கள் கொஞ்சம்
உற்று பார்த்தால்
கடவுளின் சாயல் தெரிகிறது ....

பிஞ்சு பாதம் அது பூமி படுகையிலே
நெஞ்சு பதறி போகிறது ...

உன் கொஞ்சும் மொழி தான் கேட்க
கொஞ்ச நேரம் போதாது ...

உன் அழகின் சாயலில்
எத்தனை பூக்கள் பூத்தாலும்
உன் புன்னகை முன்
அத்தனையும் தோற்று
மடிந்து விடுகிறது ....

உன்னை கொஞ்ச ஆரம்பிக்கையில்
அகாராதியில் புதிய சொற்கள்
தோன்றுகிறது ....

குறும்புகள் கொட்டி கொண்டே
இருக்கும் நீர்விழ்ச்சி நீ....

எத்தனை முறை அடித்தாலும்
அம்மா என்று கதறி ஒடி வரும்
உன் மன்னிக்கும் குணம் முன்
கடவுளும் தோற்கும் ....

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

வரிகளுடன்,
கிரிஜா.தி

எழுதியவர் : கிரிஜா.தி (14-Nov-16, 10:15 am)
பார்வை : 157

மேலே