பனியில் நனைந்த சிறுமலர்
![](https://eluthu.com/images/loading.gif)
பனியில் நனைந்த சிறுமலர்
பகலவன் வருகையில் மகிழ்ந்தது
இரவின் அணைப்பை உதறி
இளங்கதிர் தன்னை வரவேற்றது
----வஞ்சிப்பாவின் இனமான வஞ்சி விருத்தம் .
பனியில் நனைந்த சிறுமலர் மெல்ல
பகலவன் வந்திட துள்ளிச் சிலிர்த்து
இரவின் அணைப்பை உதறி விலக்கி
இளங்கதி ரைவரவேற் கும் .
----மேலே உள்ள பாவை பலவிகற்ப இன்னிசை வெண்பாவாக மாற்றி
அமைத்திருக்கிறேன். ஆர்வலர்கள் கவனிக்க .
---கவின் சாரலன்