புயல்
நாடா கரையை கடக்கிறது
நிலவும் வானிலை
உன்னை நாடிடவே
மனமும் துடிக்கிறது ....
மழை மனதையும்
சேர்த்தே நனைக்கிறது
நிதம் உன்னையே
அதுவும் நினைக்கிறதே ...
வழிந்த துளிகள்
சாலையில் உருண்டோடுது
விழியில் துளிகள்
உன் நினைவில் உருண்டோடுது ....
புயல் எச்சரிக்கை
விடுத்து செய்திகள் பரந்தோடுது
நிவாரண நிதியாய்
ஒரு முத்தத்தை தான் கேட்குது ....
கவியுடன்,
கிரிஜா.தி