உன் நினைப்பில்

பட்டு சேலை கட்டி
நீ நடந்து வந்தா மூச்சு முட்டுதடி
பட்டு பூச்சியெல்லாம்
பறந்து போக உன் சாயல் தானடி
குலுங்கும் வளையல் சிணுங்குகையில்
குயில் பாட்டு காதில் கேட்குதடி
உன் நெற்றி பொட்டு
நடுவுல தான்
சூரியன் உதயமாகுதடி
உன் உதட்டு ரேகையில
என் எதிர்காலம் தெரியுதடி
உன் கருங்கூந்தலில் தான்
குறிஞ்சிப் பூவும் பூக்குதடி
நித்தம் நித்தம்
உன் நினைப்பில் தான் என் பொழுதுகள்
கழியுதடி