ரோஜா

ரோஜா.
ரோஜா மொட்டு ஒன்று
பூத்துவிடத் துடித்தது
முட்களை வேலியாகக்
கொண்ட தைரியத்தில்.

முட்கள் வேலியல்ல
தலையில் சூட்டப்பட்டுள்ள
முள் கீரீடம் என்பதை
அறியாமல் பூத்து விட்டது
அவசரமாக.

முட்கள் வண்டுகளாக மாறி
குடைந்தெடுக்க துவண்டு
போனது ரோஜா.

குப்பைத் தொட்டியில்
கிடந்த ரோஜா
சாக்கடையுடன் போய்
கலந்தது.

பூச்சிகள். பதம் பார்க்க
நோய். கொண்ட. ரோஜா
தூக்கி. எறியப்பட்டது
தெருவில்.

அழுதாலும் ஆதரவு காட்ட
ஆளில்லாத ரோஜா,
வெறி கொண்ட கயவரை
வேட்டையாட துணிந்து
அரக்கியாக மாறியது,
கல்கி அவதாரம் கடவுள்
எடுத்து தன்னை வதைத்தாலும்
பரவாயில்லை என்று.
புரிந்தவர்கள். ரோஜாவை
பழிக்காதீர்கள் பாவம்.
மீனாகோபி.

எழுதியவர் : மீனாகோபி (3-Dec-16, 9:36 pm)
சேர்த்தது : Meena gopi
Tanglish : roja
பார்வை : 66

மேலே