Meena gopi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Meena gopi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Dec-2016
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  19

என் படைப்புகள்
Meena gopi செய்திகள்
Meena gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2016 12:47 pm

பிடித்த உணவு.

ஒன்றா இரண்டா
பட்டியலிட்டால் நீளும் பக்கம்
மாமன் மாமி முகம் கோணாமலும்
நாத்தியை சமாளித்தும்
மைத்துனர் சாப்பிட சமைத்தும்
வரும் நங்கையர் நவில்வது எப்படி
தனக்கென்று. பிடித்த உணவை.

ஆசையாக சாப்பிடும் என்னவரிடம்
எனக்குப் பிடித்த உணவு எது
என்றால். அறிக்கை வாசிப்பார்
அறியாமல் போனேனே என்று.
பிள்ளைகளைக் கேட்டால் பிடித்த உணவா. அப்படியென்றால்
என்றே . நகைத்திடுவார்.
.
சமையல். ராணி கிரீடம் சூட்டிக் கொண்டு.
அகப்பையை கையில் ஏந்தி
சமையல் அறை சாம்ராஜ்ஜியம் நடத்தும்எனக்கு பிடித்த உணவை உங்கள்
காதோடு சொல்கிறேன் ரகசியம் காத்திடுவீர்.

தலைவாழை இலையில் நடுநாயகமாக

மேலும்

Meena gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2016 7:35 pm

தூரத்துப்பச்சை....

விரிந்தே கிடக்கும் கருப்புக் குடையாய்
வானம், பகற்பொழுதில் சேகரித்த பூக்களை
சிந்தி விடாமல் தாங்கியிருந்தது.
வானம் தவறவிடும் பூக்களை
தொடுக்க ஆவல் கொண்டு நான். நோக்க
நிலவு மங்கை சுற்றி வந்து
. அலையும் அழியும்
மேகத்தை நம்பி. எச்சரித்தாள்
தன்னுடைய பூக்களென்று.

விடியட்டும் பறிக்கலாம் என்றெண்ணி
அரவணைத்தேன் உறக்கத்தை.

காகம் கரையும் கருக்கலில் எழுந்து
ஆவலுடன் ஆதவனை நோக்கினேன்
கையில் நூல் கொண்டு.
பாதிப்பூக்களை மறைத்தும்
மீதிப் பூக்களை விழுங்கிப்
புதைத்துக் கொண்டும் புலர்ந்தது ஞாயிறு.

மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தையாய்
அழுது நிலம் நோக்கினேன்.
பூத்து விர

மேலும்

Meena gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2016 12:24 pm

ஏ மனமே
என்னுள் மறைந்திருப்பது
எங்கே?
கண்டால் கடிவாளம்
போடுவேன் என்றோ
காற்றாய் பிடிபடாமல்
திரிகிறாய்.

தோற்பாவையாய்
ஒருவன் ஆட்டிவைக்க
கயிற்றில் சிக்கிக் கொண்டு
நிஜத்தில் ஒன்றுமாய்
நிழலில் வேறுமாய் என்னை
வாழ வைக்கிறாய்.

எனக்கு வானத்தை
எட்டித் தொட
ஆசையில்லை.
மண்ணை முத்தமிட்டு
நடக்கத் தெரிந்தாலே
போதும்.

நிலவில் சென்று
சோறு உண்ண
ஆசையில்லை.
மொட்டைமாடி
நிலாச் சோறு
கிடைத்தால் போதும்.
ஏ மனமே!
உன் போக்கில் என்னை
இழுத்துச் செல்கிறாய்.
உன்னை தொலைக்க
தெரியவில்லை.
உன்னுள் தொலைந்துப்
போகவும் எனக்குத்
தெரியவில்லை.

நான் சொல்வதை
நீ. ஏற்பதுமில்லை என்னை.
சொல்ல விடு

மேலும்

Meena gopi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 1:38 pm

நீ வருவாயென....

பேசியதே பேசியிருப்போம்
பேசப்படாமலே முடித்திருப்போம்
பேசப்பட்டதும் பேசப்படாததாய்
இருந்திருக்கும்.
ஆனாலும்,
நாம் பேசினோம்.

மனக் கிடங்கில்
நிரம்பியுள்ள ஆசைகள்
தொண்டைக்குள் சிக்க
தப்பித்தவை மட்டும்
வாய்வழி கசிகிறது
வார்த்தையாக.
நாம் பேசினோம்
யோசித்து.

,
சிறைபட்ட வாசகத்தை
விடுவிக்க எண்ணி
கவிதை வடிக்க
எடுத்தேன் எழுதுகோலை.
நடுங்குகின்றன விரல்கள்
நரம்புத் தளர்ச்சியால்
பாதித்தது போல.

என் செய்வேன்?
எப்போது வரப்போகிறாய்
நானும் நீயும்
நாமுமாகிப் பேச.
வரவேற்பேன் நிச்சயம்
நீ. வரும்
பாதைச் சாலையாய்
கிடந்து.

மீனாகோபி.

மேலும்

Meena gopi - Meena gopi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 8:32 pm

வறண்ட பூமி

வந்த மழையும்
பூமியை
தடவிட்டுப் போயிடிச்சி.
,
வர வேண்டிய மழையும்
நல்லகாலம் கேட்டு

ஜோசியம் பார்க்க,
போயிடிச்சி.
நீரால
கண்ணெல்லாம்
நிரம்பிக்கிடக்கு.
நிரம்ப வேண்டிய
.
ஆறும் குளமும்
வத்திக்கிடக்கு,
ஆடும் மாடும்
திரிஞ்சிக்கிடக்கும்
இடமாச்சி.
,
புயலொன்னு
புறப்படும்னு பீதி
கிளப்பும் சேதியால
கடலோடும் போகாம
சனமெல்லாம்
தரையோடு தங்கியாச்சி.
வானமும்
தூறல் போட்டு
தூங்கிடிச்சி .
பூமியெங்கும்
Bore ஐ போட்டு
உரிஞ்செடுத்தாச்சி.
ஊத்தும் வராம
உலர்ந்தும்
போயாச்சி..
.
குடிக்கவும்
தண்ணியில்ல,
அடுத்த ஊர்க்காரனும்
அள்ளிவழங்க
தயாராயில்ல..
ஓடி ஒளிஞ்ச மேகமெல்லாம

மேலும்

நன்றி. சகோதரா 08-Dec-2016 11:03 am
மழை இன்றேல் கொடுமையே ... 07-Dec-2016 8:57 pm
Meena gopi - Meena gopi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2016 10:50 am

காதல்

இருவருமாக
தொடங்கும்
உரையாடல் எப்போதும்
ஊடலில் முடிய
இனி
பேசவே கூடாது என
மனம் எடுத்த
உறுதி
உன் குரல் கேட்ட
தருணத்தில்
குலைந்துப்போகிறது.
மனமோ
நொடிப் பொழுதில்
மணல் வீடாய்
சரிந்துப்போகிறது.
பயமாய் இருக்கிறது
பார்த்த மாத்திரத்தில்
பனியாய் குளிர்ந்து
உன் காதல் வெப்பத்தில்
கரைந்து
காணாமல் போய்
விடுவேனோ என்று.

மீனாகோபி.


.

மேலும்

விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். 05-Dec-2016 9:18 am
Meena gopi - Meena gopi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2016 10:50 am

காதல்

இருவருமாக
தொடங்கும்
உரையாடல் எப்போதும்
ஊடலில் முடிய
இனி
பேசவே கூடாது என
மனம் எடுத்த
உறுதி
உன் குரல் கேட்ட
தருணத்தில்
குலைந்துப்போகிறது.
மனமோ
நொடிப் பொழுதில்
மணல் வீடாய்
சரிந்துப்போகிறது.
பயமாய் இருக்கிறது
பார்த்த மாத்திரத்தில்
பனியாய் குளிர்ந்து
உன் காதல் வெப்பத்தில்
கரைந்து
காணாமல் போய்
விடுவேனோ என்று.

மீனாகோபி.


.

மேலும்

விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். 05-Dec-2016 9:18 am
Meena gopi - Meena gopi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2016 2:53 pm

ஜன்னல் நிலவு.
வானம் பொட்டு வைக்க
மறந்த தினத்திலும்
எனக்கு மட்டும்
நிலவின் தரிசனம்
ஜன்னலில் தெரியும்.
என் காதலியின் முகம்.

நிலவே,
ஜன்னல் மேகத்தில்
ஒளிந்தது போதும்.
விரும்பி மனக்கதவை
திறந்து, விரைந்து
வாசலில் வந்துப்பார்.

உன்னை தொட்டு
விளையாட வேண்டுமானால்
வானத்திடம் வரம் வேண்டி
நிற்கலாம் நியாயமே!
எட்ட நின்று பார்க்க யார்
அனுமதி பெற வேண்டும்.

நிலவே,
உன்னைப் பார்த்தால்தான்
சாப்பிடுவேன் என்று
அடம் பிடிக்கிறது இந்த
மீசை வைத்த குழந்தை!
மீனா

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா 05-Dec-2016 9:16 am
அழகான சிந்தை.... வாழ்த்துக்கள்.... 05-Dec-2016 9:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே