வறண்ட பூமி

வறண்ட பூமி

வந்த மழையும்
பூமியை
தடவிட்டுப் போயிடிச்சி.
,
வர வேண்டிய மழையும்
நல்லகாலம் கேட்டு

ஜோசியம் பார்க்க,
போயிடிச்சி.
நீரால
கண்ணெல்லாம்
நிரம்பிக்கிடக்கு.
நிரம்ப வேண்டிய
.
ஆறும் குளமும்
வத்திக்கிடக்கு,
ஆடும் மாடும்
திரிஞ்சிக்கிடக்கும்
இடமாச்சி.
,
புயலொன்னு
புறப்படும்னு பீதி
கிளப்பும் சேதியால
கடலோடும் போகாம
சனமெல்லாம்
தரையோடு தங்கியாச்சி.
வானமும்
தூறல் போட்டு
தூங்கிடிச்சி .
பூமியெங்கும்
Bore ஐ போட்டு
உரிஞ்செடுத்தாச்சி.
ஊத்தும் வராம
உலர்ந்தும்
போயாச்சி..
.
குடிக்கவும்
தண்ணியில்ல,
அடுத்த ஊர்க்காரனும்
அள்ளிவழங்க
தயாராயில்ல..
ஓடி ஒளிஞ்ச மேகமெல்லாம்
திரும்ப வரணும்
காய்ஞ்சிக் கிடக்கற
கழனியெல்லாயம்
கதிர் விடணும்.
கார்த்திகைப்
போச்சுன்னா
கடந்து போகும்
மழைக்காலம்.
இயற்கையே இரக்கம்
காட்டு. இல்லை
இயங்குவதை
நிறுத்தி விடு.

மீனாகோபி.

எழுதியவர் : மீனாகோபி (7-Dec-16, 8:32 pm)
சேர்த்தது : Meena gopi
பார்வை : 93

மேலே