காதல் உறவு

இன்றுதான் எண்ணினேன்..
அவளின்
அகத்தை
அருகில்
இருந்த
என்னிடம்
கொடுத்ததை
எண்ணி..

சற்றே அறிந்தேன்
அவள் என்
உள்ளத்தில்
புகுந்து
விட்டால் ..
இனி
என்
இல்லத்தில்
குடியேறத்தான்
இந்த
இருமண விழா ...

நேரம் கடந்தது..
அது ஒரு
இரவின்
வருகை நேரம்
வெளிச்சமறியாத
விழிகள் ...
மௌனமாக பேசும்
இரவு பொழுது அது ...

உறவுகள் அன்று
உறங்கியதும்
தன்னை
அவனிடம்
ஒப்படைக்கும்
ஒரு நாள் இரவு
இருவரின் முதலிரவு...

இன்றுதான் அவளுக்கு
புரிந்தது ...
அவள் கற்பை களவாடிய
கள்வன் அவன்.
அவன் என்
கரு ''ப்பை''
உருவாக
காத்திருக்கிறான்...
தன் மழலை
வருகைக்காக...

இன்றுதான் அவனுக்கு
புரிந்தது..
நிறைமாத
கர்ப்பிணி
தன் சிசுவை
சிறை வைக்கிறது
சில மாதங்களுக்கு
தன் தாய்மைக்காக......

எழுதியவர் : அன்புடன் பிரசாந்த் (7-Dec-16, 9:55 pm)
Tanglish : kaadhal uravu
பார்வை : 477

மேலே