களிமண்ணும் கலியுகமும்
களிமண்ணும் உதவிடும்
கையாளும் பாண்டமாகும்
கைவினைப் பொருளாகும்
கலையழகு சிலையாகும்
உயிர்பெற்ற உருவமாகும்
மனிதனின் கரம்பட்டால் !
பற்றிடும் மேனியெங்கும்
பரவிடும் மோகத்தீயாய்
நானிலத்தில் நாகரீகமும்
நாளும் முன்னேறுகிறது
உலைகள் கொதித்திடும்
பாத்திரங்கள் மாறுகிறது !
விவசாயி விதைத்தாலும்
விளைச்சலால் பயனோ
மண்ணில் அனைவருக்கும் !
தொழிலென செய்தாலும்
குயவரென அழைத்தாலும்
படைப்புகள் பயன்பாட்டிற்கே !
வேதியியல் பொருளன்றி
மேனாட்டுப் பகட்டின்றி
உழைப்பாளியின் உருவமது
இன்றுவரை விரும்புவது
களிமண்ணும் கலியுகத்தில்
மறுக்காது மனங்களும் !
பழனி குமார்

