பிடித்த ஜ
பிடித்த உணவு.
ஒன்றா இரண்டா
பட்டியலிட்டால் நீளும் பக்கம்
மாமன் மாமி முகம் கோணாமலும்
நாத்தியை சமாளித்தும்
மைத்துனர் சாப்பிட சமைத்தும்
வரும் நங்கையர் நவில்வது எப்படி
தனக்கென்று. பிடித்த உணவை.
ஆசையாக சாப்பிடும் என்னவரிடம்
எனக்குப் பிடித்த உணவு எது
என்றால். அறிக்கை வாசிப்பார்
அறியாமல் போனேனே என்று.
பிள்ளைகளைக் கேட்டால் பிடித்த உணவா. அப்படியென்றால்
என்றே . நகைத்திடுவார்.
.
சமையல். ராணி கிரீடம் சூட்டிக் கொண்டு.
அகப்பையை கையில் ஏந்தி
சமையல் அறை சாம்ராஜ்ஜியம் நடத்தும்எனக்கு பிடித்த உணவை உங்கள்
காதோடு சொல்கிறேன் ரகசியம் காத்திடுவீர்.
தலைவாழை இலையில் நடுநாயகமாக
குவித்திருக்கும் பச்சரிசி சோற்றில்
மிளகும் சீரகமும் சேர்த்து பூண்டோடு
சமைத்த பருப்பு கடையலில்
உருக்கிய நெய்யை ஊற்றி உருட்டி
சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும் எனக்கு.
வெளியிடாதீர்கள் இதை. வாரம் தோறும் என் வீட்டுச் சமையலில்
இடம்பெறும் ரகசியம் தெரிந்து
என் கிரீடம் இறக்கப்படலாம்.
மீனாகோபி