கண்ணம்மா என் காதலி
கனவுத் திரையிடை கண்ணம்மா
நின் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
நிலா வீசுது வானில் கண்ணம்மா
நின் வரவுக்காக நான் காத்திருக்கின்றேன்
இந்தத் தென்றலும் வந்து மேனி தழுவுதடி
நீ இல்லாததைச் சொல்லிப் போகுதடி
கண்ணம்மா கண்ணம்மா என் காதலியே
உன் எண்ணத்தில் மிதக்கும் காதலனின்
கண் முன் வந்து தோன்றிடடி
நெஞ்ச வெளியிடை நித்தம் நடந்து வரும்
நிலவுக் கவிதையே என் கண்ணம்மா !
---கவின் சாரலன்