ஏ மனமே
ஏ மனமே
என்னுள் மறைந்திருப்பது
எங்கே?
கண்டால் கடிவாளம்
போடுவேன் என்றோ
காற்றாய் பிடிபடாமல்
திரிகிறாய்.
தோற்பாவையாய்
ஒருவன் ஆட்டிவைக்க
கயிற்றில் சிக்கிக் கொண்டு
நிஜத்தில் ஒன்றுமாய்
நிழலில் வேறுமாய் என்னை
வாழ வைக்கிறாய்.
எனக்கு வானத்தை
எட்டித் தொட
ஆசையில்லை.
மண்ணை முத்தமிட்டு
நடக்கத் தெரிந்தாலே
போதும்.
நிலவில் சென்று
சோறு உண்ண
ஆசையில்லை.
மொட்டைமாடி
நிலாச் சோறு
கிடைத்தால் போதும்.
ஏ மனமே!
உன் போக்கில் என்னை
இழுத்துச் செல்கிறாய்.
உன்னை தொலைக்க
தெரியவில்லை.
உன்னுள் தொலைந்துப்
போகவும் எனக்குத்
தெரியவில்லை.
நான் சொல்வதை
நீ. ஏற்பதுமில்லை என்னை.
சொல்ல விடுவதுமில்லை.
உன்னைப் பற்றி
கவிதை. சொல்லவோ
வார்த்தையும் வசப்படவில்லை.
ஏ மனமே
என்னுள் மறைந்திருப்பது
எங்கே?
கண்டால் கடிவாளம்
போடுவேன் என்றோ
ஒளிந்திருக்கிறாய்!
மீனாகோ