என்னவள்

கொட்டமிடும் அழகில்
வட்டமிடும் பாவாடை
முட்டுகின்ற முல்லை சிரிப்பில்
அழகோ அழகு என்னவள்

அவள் குழலிசைக்கும் காற்று
தென்றலான அதிசயம்
அணிகலன்கள் அவள் அணிந்து
விலை கூடிய இரகசியம்

கொலுசின் ஒளி கேட்டு
பூமி சுழலும் விந்தை
அவளை பார்த்து
கவிதையில் கிடந்தது என் சிந்தை ...

எழுதியவர் : கிரிஜா.தி (10-Dec-16, 1:54 pm)
Tanglish : ennaval
பார்வை : 465

மேலே