தூரத்துப்பச்சை
தூரத்துப்பச்சை....
விரிந்தே கிடக்கும் கருப்புக் குடையாய்
வானம், பகற்பொழுதில் சேகரித்த பூக்களை
சிந்தி விடாமல் தாங்கியிருந்தது.
வானம் தவறவிடும் பூக்களை
தொடுக்க ஆவல் கொண்டு நான். நோக்க
நிலவு மங்கை சுற்றி வந்து
. அலையும் அழியும்
மேகத்தை நம்பி. எச்சரித்தாள்
தன்னுடைய பூக்களென்று.
விடியட்டும் பறிக்கலாம் என்றெண்ணி
அரவணைத்தேன் உறக்கத்தை.
காகம் கரையும் கருக்கலில் எழுந்து
ஆவலுடன் ஆதவனை நோக்கினேன்
கையில் நூல் கொண்டு.
பாதிப்பூக்களை மறைத்தும்
மீதிப் பூக்களை விழுங்கிப்
புதைத்துக் கொண்டும் புலர்ந்தது ஞாயிறு.
மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தையாய்
அழுது நிலம் நோக்கினேன்.
பூத்து விரிந்து பரந்து
கிடந்தது கண்முன்னே பூமி.
உரைத்தது உண்மையை
உணரச்செய்தது என் நிலைமையை
ஊமைப் பாடும் பாடலாய்
முடிந்தது என் அழுகை.
மீனாகோபி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
