காதல்

காதல்

இருவருமாக
தொடங்கும்
உரையாடல் எப்போதும்
ஊடலில் முடிய
இனி
பேசவே கூடாது என
மனம் எடுத்த
உறுதி
உன் குரல் கேட்ட
தருணத்தில்
குலைந்துப்போகிறது.
மனமோ
நொடிப் பொழுதில்
மணல் வீடாய்
சரிந்துப்போகிறது.
பயமாய் இருக்கிறது
பார்த்த மாத்திரத்தில்
பனியாய் குளிர்ந்து
உன் காதல் வெப்பத்தில்
கரைந்து
காணாமல் போய்
விடுவேனோ என்று.

மீனாகோபி.


.

எழுதியவர் : மீனாகோபி (3-Dec-16, 10:50 am)
சேர்த்தது : Meena gopi
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே