நீ வருவாயென
நீ வருவாயென....
பேசியதே பேசியிருப்போம்
பேசப்படாமலே முடித்திருப்போம்
பேசப்பட்டதும் பேசப்படாததாய்
இருந்திருக்கும்.
ஆனாலும்,
நாம் பேசினோம்.
மனக் கிடங்கில்
நிரம்பியுள்ள ஆசைகள்
தொண்டைக்குள் சிக்க
தப்பித்தவை மட்டும்
வாய்வழி கசிகிறது
வார்த்தையாக.
நாம் பேசினோம்
யோசித்து.
,
சிறைபட்ட வாசகத்தை
விடுவிக்க எண்ணி
கவிதை வடிக்க
எடுத்தேன் எழுதுகோலை.
நடுங்குகின்றன விரல்கள்
நரம்புத் தளர்ச்சியால்
பாதித்தது போல.
என் செய்வேன்?
எப்போது வரப்போகிறாய்
நானும் நீயும்
நாமுமாகிப் பேச.
வரவேற்பேன் நிச்சயம்
நீ. வரும்
பாதைச் சாலையாய்
கிடந்து.
மீனாகோபி.