காலம் செய்த கோலம்

காலம் செய்த கோலம் அல்ல
ஞாலம் கூறிய பாவம் அல்ல
பாவம் செய்த பாவம் இது
பாவமானவர்கள் வஞ்சித்த சாபம் இது..!

கள்ள மனம் படைத்தவன்
கள்ள பணம் மண்ணில் புதைத்தவன்
மண்ணோடு மண்ணாய் மாண்டானோ
மனமும் பணமும் ஆறடிக்குழிக்குள்..!

பிச்சைக்காரனாய் நடித்தவன்
பிச்சைகாரனாய் மாறிப்போகிறான்..!
நடுத்தெருவில் அவனும்
அவன் வைத்த பணமும்..!

காலமும் காலனும்
செய்த கோலம்
முற்றுப்புள்ளி வைத்தது
கள்ள மனமும் பணமும்..!

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி. (14-Nov-16, 12:21 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kaalam seitha kolam
பார்வை : 233

மேலே