அவளின் நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
முழுதுமாய் ஆக்கரமித்து
கொள்கிறது..

தென்றல் தீண்டினாலும்
உன் நினைவுகளால்
என் மனம் புயல்
எச்சரிக்கை விடுக்கிறது..

கடலிடம் கோபம் கொண்டேன்
என்னவள் வராமல் ஏன் அவள்
நினைவுகளை கரை
ஒதுக்கினாய் என்று..

எப்படி புரிய வைப்பேன்
என் இதயத்திற்கு
அவள் நினனவுகளால்
தான் நீ துடிக்கிறாய் என்று..

உன் நினைவு வருகையிலே
என் மனதில் மழையாய்
பொழிகிறாய் என்னையும்
அறியாமல் என் விழியோரம்
கண்ணீர் துளிகள்..

உன் நினைவுகளுக்கு
நன்றி சொல்கிறேன்
நான் உயிர் வாழ்வதே
உன் அழகிய
நினைவுகளால் தான்..

எழுதியவர் : கா. அம்பிகா (22-Nov-16, 8:19 pm)
பார்வை : 823

மேலே