அன்புள்ள​ மான்விழியே ​

அன்புள்ள மான்விழியே அழகின் உறைவிடமே
அழைக்கிறேன் உன்னை துடிக்கும் மனதுடனே !
காத்திருப்பேன் கண்டிட காரிருள் சூழ்ந்தாலும்
காரிகையும் ஏங்குகிறேன் உந்தன் வரவிற்காக !

கவின்மிகு கன்னியே மயங்கிட்டேன் உன்னழகில்
எழில்மிகு ஓவியமே ஏந்துகிறேன் என்னிதயத்தில்
கலைமிகு சிற்பமே சுவாசிக்கிறேன் உனைநான்
மறுக்காமல் ஏற்றிடுவாய் மணாளனாய் எனைநீ !

வாழ்வெனும் நதியினில் இல்லறமெனும் படகில்
பயணிப்போம் நாமும் இதயமெனும் துடுப்புடனே !
எதிர்கொள்வோம் துணிவோடு கனிரசக் காதலுடன்
எழுதுவோம் பிழையிலா வாழ்க்கைக் கவிதையை !

இணையானக் கருத்தாக எடுத்திடும் முடிவுகளுடன்
இல்வாழ்வை இவ்வுலகில் இனிதாக நடத்திடுவோம் !
இடரில்லாப் பாதையில் நடைபோட்டு எந்நாளும்
இன்பத்தின் விளிம்பை இருவரும் தொட்டிடுவோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Nov-16, 9:45 pm)
பார்வை : 211

மேலே