காத்திருப்பு

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
வீட்டு வாசல் நின்று விழி சிந்திக் கொண்டேன்
தாங்காத காதல் நினைவுச் சுமை ஏற்றிவிட்டு
இனி ஓடிவிளையாடு என்றே இந்த உலகத்தின் னெனை
வாழ விட்டு சென்றான் வேறு நாட்டின்
உழைப்பு தேடி...

சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
வெண்ணிற அகன்ற மார்பினை கொண்டவன் பிரிந்து செல்ல
நூலையிடை கொண்ட யான் நெஞ்சம் விம்மி நிலையிலஞ்சி கண்ணீர் சிந்தியே யென் மன்னன் வரவிற்காத் திருக்கிறேன்....

மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள் கொண்ட
யென் வாழ்வும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ...?

புண் படவே அங்குசத்தால் குத்தும்
பிளிறி யதன் வேதனையை தாங்கும் யானை போல்
மன்னன் தரும் பிரிவு துயரை மாமகிழ்வாகி தாங்குகிறேன் யானும்
காத்திருப்பின் சுகத்தை அடைய....

எழுதியவர் : சி.பிருந்தா (22-Nov-16, 7:57 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : kaathiruppu
பார்வை : 143

மேலே