நீ இன்றி

இதனை எதனால்
மெய்ப்பிக்க ?
அறியேன் .

அதனை அறிந்தால்
இயம்புக .

புற்களும் புதுவித
அதிசயமாக
என் கண் முன்னே

உன் நினைவு
என்னை இயங்க வைக்கும்
சக்தியோ?

என் அதிகாலை
தேடும் விழிகள் உனது .
உறங்கும் வேளை
தலை சாயத்துடிக்கும்
நின் மார்பு எனது .

கைகோர்த்து நடக்க
தலை தூக்கும் அவா.

மறுநொடியே
தூங்கி போகும்
பயத்தின் கைபிடித்தபடியே .

ஒரு சொல் சொல்லாமல்
உடைந்தது இதயம் .
எனினும்
நீயும் காதலும்
என்னுள்
ஆழத்தினும் ஆழமாய்

கண்ணம் சுடும்
நீர்த்துளிகள்
ஓர் செய்தி
உண்மையென உரைத்தது .

நீ இன்றி
வாழ்வு இல்லை .

எழுதியவர் : ரதி ரதி (4-Nov-16, 12:04 pm)
Tanglish : nee indri
பார்வை : 119

மேலே