காதலும் கற்று மற

நண்பா !
காதலும் கற்று மற !

காமம் இங்கே
விலையில் கடைவிரிக்கப்படுகிறது !

காதல் எப்போதோ
கற்பிழந்து விட்டது !
காமத்தின் பிரவாகத்தில்
காதல் மூச்சடைத்து
மூர்சையடைந்து விட்டது !

ஆம் ! இருபத்தொன்றாம்
நூற்றாண்டில் காதல்
வாங்கினால் காமம்
இலவசம் !

கற்பு நூலகத்தின்
புத்தகங்களில் மட்டும்
தீண்டத் தகாததாய் !

உறவுகளை உதறிவிட்டு,
தன்மானத்தை தலை முழுகி,
கரன்சி கட்டுகளோடு
இன்றைய காதல் கைகூடும் !

அட்சய பாத்திரமாய்
அச்சடித்த நோட்டுக்கள்
வருவது நின்று போனால்
நீரின்றி நிர்மூலமாகும்
வாழ்க்கை !

காதல் மீண்டும்
உயிர் பெறலாம் ,
ஒருவேளை மனித வாழ்வு
கற்காலத்திலிருந்து
மீண்டும் துவங்கினால் !

வாழ்வில் காதல்
ஒரு அனுபவமாய்
மட்டும் கலந்திருக்கட்டும்
உணவில் உப்பு போல !

மீறினால் சுவை மாறிப்போகும் !
மனதில்
சுமை கூடிப்போகும் !

ஆதலால் காதலா !
காதலும் கற்று மற !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (4-Nov-16, 12:50 pm)
பார்வை : 160

மேலே