உனக்காக

இத்தனை காதல்
எத்தனை நாள்
மறைத்து வைத்திருந்தாயோ ?

உனக்காக
என்ன செய்வது?

நரம்பு கயிறு எடுத்து
காலத்தை நகராமல்
நம்மோடு இணைக்கவா ?

செல்களையெல்லாம் இலையாக
விரித்து என்னையே பரிமாறவா?

சரித தேகத்தில் புகுந்து
ஒளிந்து வளர்ந்த உயிரை
உனக்கு உயில் எழுதவா?

குருதி ஓடும் திசையில்
இதயத்துடிப்பை பிணைத்து
கண் இமைக்கும் நேரத்தில்
மெட்டு ஓன்று அமைக்கவா?

என் உடல்
மச்சங்களை மட்டும்
பிரித்தெடுத்து

நம் காதலுக்கு
சுற்றி போடவா ?

தென்றலாக மாறி
உன் ஸ்வாசத்தோடு கலந்து
மூச்சு குழலில் உள்ளிறங்கி
என்னை நானே கண்டுவரவா?


இத்தனையும் சாத்தியம்.

உன்னை பிரியநேர்ந்தால்,

நியாபக பிசாசு
எனக்குள் உட்கார்த்து
இறங்க மறக்கும் .

எரிமலையின் உச்சகட்ட
வெட்பமாய் ,
உன் முத்த ஈரம்
என்னை கொளுத்தும் .

சூரியனின் இரவல் ஒளியை
திருப்பி கொடுத்த அம்புலியாக
என் பாதை இருளில் மூழ்கும்.

சூறாவளியில் சிக்கிய
குடிசைவீடாக
நீ தொட்ட இடங்கள் மட்டும்
சிதறி போகும் .

உயிர் உள்ள புதுமையை
பார்ப்பது போல்
உன் முதல் பரிசு
கண் எதிரே நிற்கும் .

என்னையே திண்ணும்
தனிமையிலும் ,
என் நிழல் கூட
உன்னோடு வாழ ஏங்கி நின்று
தரை தரையாக அழுகும் .

உன்னை நினைத்து
என் மனது என்ன பாடு படும்?

என் உயிரை
அடிக்கடி திண்ணும்
உன் விழிகளில்
விடை உள்ளதா ?

எழுதியவர் : ரதி ரதி (22-Jul-16, 12:01 pm)
Tanglish : unakaaga
பார்வை : 120

மேலே