வரம் பெற்றேன் தவம் செய்து --முஹம்மத் ஸர்பான்

மனதோடு நான் கட்டிய
தாஜ்மஹால் இன்று
காலத்தால் வந்த புயலால்
துளித்துளி கண்ணீரில்
கரைந்து கொண்டிருக்கிறது.
வெண்ணிலா ஈன்ற
மண்ணிலா பெண்ணிலா
சோலையிடம் என்னவள்
பெயர் கேட்டேன் "ரோஜா"
என்றது மாடப் புறா
கனவில் முத்தம் கேட்டேன்
காற்றில் விலகிய
துப்பட்டாவை சரி செய்கிறாள்
பூக்களின் தேசத்தில் நான்
குற்றவாளியாக நிற்கிறேன்
காற்றும் பிடியாணை வாங்கி
என்னை தேடி அலைகிறது.
வேதம் ஓதும் கல்லூரியில்
சொல்லாமல் இணைந்தாய்.
சிலமாதம் வருடம் கடந்தும்
உன் முகம் காணவில்லை..,
பாதணி திருத்தும் பணியில்
உன் முன்றலில் காத்திருக்கிறேன்.
வழமையான என் பாதையும்
இளமையான என் வாழ்க்கையும்
மொழியறியா மழலை போல்
உன்னை சுற்றிச்சுற்றி அலைகிறது.
உன் மாதாவிடாய் காலங்களில்
என் ஆண்மையை தொலைத்து
உன் வேதனையில் பங்கேற்க
நானும் மலடி பெண்ணாய் மாறும்
வரம் பெற்றேன் தவம் செய்து...,