முதல் காதல்!!!

காதலென்றால் என்னவென்றே
அறியாத வயதில்
அவன் கண்ணை பார்த்ததால்
எனக்குள் என்னமோ பரவசம்!!!

எனவே என் இதயம் இருந்தது
அவன் வசம்!!!

கண்கள் அழகாக
கனவுகள் வழிந்தது!!! கண்களின்ஊடே எண்ணற்ற
கற்பனைகளும் வளர்ந்தது!!!

அவனை நினைத்தே என் நெஞ்சு இருக்கும் இடம் அறிந்து கொண்டேன்!!!

அவனை இரசித்தே
ஆண்மையின் இரகசியங்கள் தெரிந்து கொண்டேன்!!!

அவனை காதலித்தே
காதலின் ஆழம் உணர்ந்து கொண்டேன்!!!

காலம் கடகட வென நடை போட்டதில் கண் பார்வையோடே கரைந்து போனது!!! என்
முதல் காதல்!!!

உலகே அழிந்தாலும்
அழியுமோ முதல் காதல்!!!....

நீ எங்கே இருக்கிறாயோ நான் அறியேனடா....
ஆனால் இன்றும் உன்னை காதலிக்கிறேனடா!!!...என் முதல் காதலா!!...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (1-May-18, 4:21 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 207

மேலே