அவன் நினைவுகள்
உயிரெனும் ஒற்றை
மெழுகை எரியவிட்டு
வெளிச்சம் பரப்புகிறேன்
இதயமற்ற உன்னால்
தனிமை எனும் இருட்டறையில்
வாழும் என் காதலுக்கு...
அடுத்த சென்மத்தில் இவனை பார்க்கவே கூடாதுஎன
எரியும்
என்னுயிரை அணைத்தபடி
சொல்லிவிட்டுப் போகிறது வலிமிகு அவன் நினைவுகள்....