ரோமர் ராமர் ஹோமர்

ரோமர் வதைத்த ஈட்டியில்
குருதி பாய்ந்தது கொலீசியத்தில் !
ராமர் வதைத்த பாணத்தில்
ராவணன் தலை பத்து உருண்டது !
பீமர் அடித்த கதையில்
துரியோதனன் கதை முடிந்தது !
பீஷ்மர் அடிக்க பாணம் எடுக்க
சிகண்டி எதிர்வர பாரதப் போர் திசை திரும்பியது !
ஹோமர் எடுத்த அடியில்
இலியட் ஒடிசி காவியம் பிறந்தது !
காமர் அடித்த மலர் பாணத்தில்
காதலில் உலகம் திளைக்குது !

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-18, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே