கஜல்
நினைவெனும் இசையினில் ஸ்வரமானாய் நீ
நினத்ததும் கிடைத்ததால் வரமானாய் நீ
கலக்கமின்றி வாழவே இனி நாளும் நான்,
சுகங்களை புனைந்திடும் கரமானாய் நீ
கசப்புகள் நிறைந்த வாழ்விது, அன்பென்னும்
இனித்திடும் பழம் தரும் மரமானாய் நீ
நலம் பெறும் நிலையினை தருமே காதல்
மகத்துவம் விளைந்திடும் அரமானாய் நீ
தினம் தினம் மனம் மகிழ்ந்திட ரோச்சிஷ்மான்
உயிர் நிலைத்து நிற்கவே தளமானாய் நீ